மின்சாரம் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் பலி.
புத்தளம் பழைய மன்னார் வீதியின் 2ஆம் கம்ப பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கட்டுமான தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு கட்டுமான தொழிலாளர்கள் தொழில் செய்யும் இரும்பில் இருந்தபோதே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
2ஆம் கம்ப பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.