கற்பிட்டியில் இடம்பெற்ற எதிர்காலத்திற்கான வலுவூட்டல் தொடர்பான செயலமர்வு
கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடன் இணைந்து கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் இணங் காணப்பட்ட கற்பிட்டி பிரதேசத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இளம் வயது திருமணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளை குறைப்பதற்காக எதிர்காலத்திற்கான வலுவூட்டல் என்ற தொனிப்பொருளில் சிறந்த வாழ்க்கைக்கான நுட்பங்களை கற்றல் தொடர்பான செயலமர்வு ஒன்று வேல்ட் விசன் லங்கா நிறுவனத்தின் கிரேஸ் செயற்திட்டதின் அனுசரனையூடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் சந்தியா பிரியதர்சினி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகல்வின் வளவாளராக கற்பிட்டி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தரும் செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஏ. ஆர் முனாஸ் கலந்து கெண்டதுடன் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்திலதா, கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் வேல்ட் விசன் லங்கா நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)