கனவை நனவாக்க டுபாய் பயணமானார் கஹட்டோவிட்ட மொஹமட் ரிம்சி
கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ரிம்சி தனது இலக்கின் அடுத்த கட்டத்தை அடையும் நோக்கில் இன்ஷா அல்லாஹ் நேற்றைய தினம் (28) துபாய் நோக்கி பயணித்தார்.
தனது பாடசாலை பருவத்திலிருந்து மெய்வள்ளுனர் போட்டிகளில் பிரகாசித்து வந்த ரிம்சி Air Tel fast bowling campaign மூலம் அகில இலங்கை ரீதியாக முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காணப்பட்டார்.
அதிலிருந்து தனது பயணத்தை ஒரு சிறந்த பந்துவீச்சாளராக வரவேண்டும் என்ற கோணத்தில் ஆரம்பித்து ஒரு கட்டத்திலும் பல படி முறைகளை தாண்டி சர்வதேச வீரர்களுக்கும் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக திகழும் அளவுக்கு தற்போது தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் துபாய் நாட்டில் உள்ள KARWAN CRICKET CLUB – UAE என்ற கழகத்தில் இரண்டு மாத ஒப்பந்த அடிப்படையில் பயிற்சிக்காக நேற்றைய தினம் புறப்பட்டு சென்றார்
இந்த பயிற்சி காலம் அவருக்கு வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அந்த கழகத்தில் நிரந்தரமாக விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும்.
பொருளாதார ரீதியில் ஆரம்பம் முதலில் மிகவும் கஷ்டப்பட்ட இவருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பலரும் தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் என்பதையும் சிலர் ஆரம்பம் முதல் இன்று வரை இவரின் பயணத்தில் உறுதுணையாக இருக்கின்றனர் என்பதையும் அவர்களின் நல்லெண்ணங்களுக்காகவும் ரிம்சியின் எதிர்காலம் சிறக்கவும் இந்த பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.
(கஹட்டோவிட்ட – ரிஹ்மி ஹக்கீம்)