சீதுவ துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்.
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனாகமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காரில் வந்த துப்பாக்கி தாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.