ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் அலுவலகம் திறந்துவைப்பு
ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் M.H.M ஹமீம், விசேட அதிதியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர்
A.W. இர்ஷாத் அலி உட்பட மன்றத்தின் நிர்வாகிகள், பொதுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக ஊடகத்துறை கலை கலாசார சமூக நலன் திட்ட பல்வேறுபட்ட வேலை திட்டத்துடன் பயணிக்கும் ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றமானது கடந்த ஒரு வருடமாக பல காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(உமர் அறபாத் – ஏறாவூர்)