இன்று முதல் ரி20 இல் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (28) இடம்பெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் கொண்ட ரி20 போட்டிகளின் முதல் போட்டி இன்றைய தினம் இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு நியூசிலாந்தின் பே ஓவல், மவுண்ட் மவுங்கனி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
சரித் அசலங்க இலங்கை அணியை வழிநடாத்த நியூசிலாந்து அணியை மிச்சேல் சாண்ட்னர் வழிநடாத்துகின்றார்.
இதுவரையில் இவ்விரு அணிகளும் 25 சர்வதேச ரி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்க அதில் நியூசிலாந்து அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரு போட்டிகள் சமநிலை பெற்றிருக்க, ஒரு போட்டி முடிவின்றி நிறைவடைந்துள்ளது. மேலும் இவ்விரு அணிகளும் கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் மோதிய இரு போட்டிகள் கொண்ட ரி20 தொடர் 1:1 என நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.