உள்நாடு

மீராவோடை பிராந்தியத்தில் ஜனாஸா நலன்புரி அமைப்பு உதயம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் மீராவோடை பிராந்திய ஜனாஸா நலன்புரி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (22) பொத்தானை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

மீராவோடை, மாஞ்சோலை, பதுரியா நகர், செம்மண்ணோடை ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து இந்த ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு மரணம் நிகழும் போது அதற்கு தேவையான அனைத்துவிதமான உதவிகள், ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தலைவராக ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், செயலாளராக மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபர் எம்.மஹ்ரூப், பொருளாளராக ரீ.எஸ்.சிஹாப், பிரதித் தலைவராக ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நௌபர், உப செயலாளராக எம்.எல்.எம்.நஜீம் ஆசிரியர் மற்றும் மாஞ்சோலை பகுதிக்கான உப தலைவராக ஏ.றிபாஸ், மீராவோடை பகுதிக்கான உப தலைவராக ஐ.எம்.றிஸ்வின் (மொடர்ன் டைலர்ஸ் உரிமையாளர்), செம்மண்ணோடை பகுதிக்கான உப தலைவராக ஏ.எஸ்.நஜிமுதீன், பதுரியா நகர் பகுதிக்கான உப தலைவராக ஈ எல். றியாஸ், மற்றும் உறுப்பினர்களாக எம்.பி.முபாரக் (அதிபர் உதுமான் வித்தியாலயம்), எம்.எம்.எம்.நாஸர் (ஜுவலரி), எச்.எம்.எம்.பர்ஸான் (ஊடகவியலாளர்), வை.எல்.யாசீன் (போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு), எம்.எச்.பௌஸான், மௌலவி எம்.எச்.முபாரக் (சிறாஜி), எம்.எம்.தௌபீக், எம்.எல்.எம்.இஸ்மாயில், என்.பி.ஏ.பரீட், எம்.எல்.சஹாப்தீன், எம்.ஜே.நூர்தீன் (உறுப்பினர் மீரா ஜும்ஆப் பள்ளிவாசல்), எம்.எல்.ஜிப்ரி, பாறுக் ஹாஜியார், ஏ.எம்.வாஹித் ஹாஜியார் (ஹார்ட்வெயார்), எம்.எஸ்.எம்.இப்ராகீம் ஆசிரியர், ஈ எல்.மஹ்ரூப் (றியோ ஸ்டூடியோ), ஏ.எல்.நாஸர், எம்.எஸ்.மீராசாஹிப் (தலைவர் பாரி ஜும்ஆப் பள்ளிவாசல்) ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

(எம்.எப்.சுஆத் அப்துல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *