உள்நாடு

சுனாமி அனர்த்தம்; களுத்துறை மாவட்ட செயலகத்தில் சமய நிகழ்வுகள்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.

இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றதுடன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகளும் பங்குபற்றினர்.

(படங்கள்: பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *