கொழும்புக்கும் பதுளைக்கும் இடையே விசேட ரயில் சேவை
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து இன்று இரவு 7.30 மற்றும் நாளை காலை 7.45 மணிக்கும், பதுளையிலிருந்து நாளை காலை 7.05 மணிக்கும், கொழும்பு கோட்டையிலிருந்து 7.30 மணிக்கும் விசேட ரயில் புறப்பட உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.