உள்நாடு

பாரிய நிதி மோசடி. தம்பதியினருக்கு ஜனவரி 6 வரை விளக்கமறியல்.

நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கணவனும் மனைவியும் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரீவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் 160 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய சந்தேகநபர்களான தம்பதியினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 49 வயதான கணவரும் அவரது 43 வயது மனைவியும் 2021 ஆம் ஆண்டு குழந்தையுடன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், கொழும்பு 05 பகுதியில் வசிக்கும் தம்பதியினர் இன்டர்போலால் சிவப்பு அறிவிப்பு சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதால், கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் தம்பதியினருக்கு எட்டு பயணத் தடைகளை விதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *