உள்நாடு

அம்பாறை மாவட்ட விவசாய குழு கூட்டம்.

அம்பாறை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் இன்று (27) மாவட்ட காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள நிலமையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது சேனாநாயக்க குலத்தின் நீர்மட்டம் ஏறத்தாழ 99.6 அடிகள் காணப்படுவதாக அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது வெள்ளத்தினால் அழிவடைந்த வயல் நிலங்கள், கால்வாய்கள் உட்பட 256 இடங்கள் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு வருவதாகவும். இந்த ஆண்டு மாத்திரம் 338 விவசாய கால்வாய்கள் சேதமடைந்துள்ளதோடு, 17 ஏரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக. மாகாண விவசாய பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் விதை ஆராய்ச்சி மையத்தின் அவசியத்தையும், விதைகளை சேமித்து வைக்கக்கூடிய விதை இல்லத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 45 ஹெக்டேர் விவசாய நிலங்கள், தொற்று பாதிப்பு மற்றும் விலங்குகள் பாதிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதில் 2.5 மில்லியன் விலங்குகள் பாதிக்கப்பட்டதுடன் அவற்றுள் 9146 கோழிகள் பாதிக்கப்பட்டதாக இடை மாகாண விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர், மாகாண பிரதி விவசாய பணிப்பாளர், இடை மாகாண பிரதி பணிப்பாளர், விவசாய சேவைகள் பிரதி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *