ஈரானிய அறிஞர் குஜ்ஜத் இஸ்லாம், கலாச்சார கவுன்சிலருடன் முஸ்லிம் மீடியா போர உறுப்பினர்கள் சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள ஈரான் கலாசசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மொசாமி குட்ரசல் மற்றும் ஈரானிலில் வருகை தந்த அறிஞர் குஜ்ஜத் இஸ்லாம் ஹர்த்தகப் ஆகியோருடனான சந்திப்பை மேற்கொண்டனர்.
கொழும்பில் உள்ள ஈரான் கலாச்சார நிலையத்தில் 26.12.2024 நடைபெற்ற இந் நிகழ்வு ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் உப தலைவர் எம்.ஏ.எம். நிலாம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மீடியா போரத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் மீடியா போரத்தின் 975 உறுப்பிணர்கள் நாடு பூராவும் உள்ளது கடந்த கால செயற்பாடுகள் மற்றும் ஏற்கனவே ஈரான் தூதுவர் ஆதரவுடன் மகளிர் நிகழ்வுகள் தேசிய தினங்கள் கலந்து கொண்டு கடந்த காலத்தில் ஊடக சுற்றுலாவுக்கு ஈரான் நாட்டுக்கு எமது ஒரு சில உறுப்பினர்கள் சென்று வந்ததாகவும் பாலஸ்தீன ஆதரவு கூட்டங்களை கொழும்பில் பலஸ்தீன் துாதுவரை அழைத்து தமிழ் சிங்கள் பேராசிரியர்களை அழைத்து கூட்டங்களை நடத்தியமையும் எடுத்துக்கூரப்பட்டது.
தொடர்ந்து இங்கு உரையாற்றிய கவுன்சிலர் முஸ்லிம் மீடியா போரத்தின் – செயற்பாடுகள் இந்த நாட்டில் வாழும் சகல இனங்களையும் இணைத்து உங்களது செயற்பாடுகள் இருத்தல் வேண்டும்.எதிர்காலத்தில் ஊடக பயிற்சி பேசியன் மொழியறிவுகளை தங்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஈரான் கலாச்சார நிலையத்தில் பேசீயன் மொழியை 1 வருட 2 வருடங்கள் இலவசமாக கற்க முடியும். அதற்காக வகுப்புக்களுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
அத்துடன் ஈரான் நாட்டில் ஊடகத்துறை சம்பந்தமான கற்கைகளில் நீங்களும் பங்கேற்க முடியும் எனவும் கலாசார கவுன்சிலர் அங்கு தெரிவித்தார்.
(அஷ்ரப் ஏ சமத்)
(அஷ்ரப் ஏ சமத்)