பெருகமலை பி.பி.எல் சுனாமி வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி
பேருவளை சீனன்கோட்டை பெருகமலை பி.பி.எல் சுனாமி வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி டிசம்பர், திகதி ( 26-12-2024) பெருகமலை பி.பி.எல் மைதானத்தில் நடைபெறும்.
மின்னொளியில் இரவு நேரப் போட்டியாக நடைபெறும் இச் சுற்றுப் போட்டியில் 32 கிரிக்கட் அணிகள் பங்குபற்றுகின்றன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 18 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பெருகமலை பி.பி.எல் விளையாட்டுக் கழகம் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தலைவர் யாஸ்மின் யாஸீன் தெரிவித்தார்.
அணிக்கு 7 பேர் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 30,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டியில் பங்குபற்றும் அணிக்கு 20,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
26ஆம் திகதி இரவு நடைபெறும் இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் பெருகமலை ஸாக்கிரீன் பள்ளிவாசல் பிரதம இமாம் மெளலவி எஸ்.எச்.எம் இம்ரான் (ஹுமைதி), ஒரு ஹேன தேவாலய பிரதம குரு அஸங்க ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.
சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு போட்டி ஆரம்பமாகும்.
பி.பி.எல் கழக உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நிகழ்வில் பங்கு பற்றுவர்.
(பேருவளை பீ. எம் முக்தார்)