சுனாமி நினைவு தினம் மாவட்ட செயலகத்தில் அனுஸ்டிப்பு
26 டிசம்பர் 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த ஆழிப்பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. இச்சம்பவத்தில், கால் மில்லியன் மக்களின் உயிரை ஆழிப்பேரலை அள்ளிச் சென்றது.
ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் லட்சக்கணக்கானோர் உறவுகளையும் இழந்து திக்கற்றுப் போயினர். உயிர் இழப்புகளைத் தாண்டி பல சொத்துக்கள் ஒரே நாளில் தவிடுபொடி ஆகின. சுனாமி தாக்குதலில் மொத்தம் 1500 கோடிக்கும் மேல் பொருள் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
உலக நாடுகள் அத்தனையும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டின. இந்த 20 ஆண்டு காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சுனாமி பாதித்து சென்ற கோரத்தடம் அழியாத கோலங்களாக அப்படியே காட்சிப் பொருளாக இருக்கின்றன.
ஆழிப்பேரலை தாக்கி 20 ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் இன்று (26)அம்பாறை மாவட்ட செயலகத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தேசிய கொடியும் அரைக்கம்பத்தில் பரக்க விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)