ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத் தாளுடன் இரு மாணவர்கள் கைது
ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டை மாற்றச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரை நேற்று (25) கைது செய்துள்ளதாக தந்திரிமலை பொலிசார் தெரிவித்தனர்.
தந்திரிமலை விஹாரை வீதியில் வசித்து வரும் 16 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தந்திரிமலை ரஜமஹா விஹாரைக்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலை கடைக்கு சந்தேக நபர்களாகிய மாணவர்கள் இருவரும் 5000 ரூபாய் நோட்டை மாற்றச் சென்ற போது அது போலி நாணயத்தாள் என சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அவர்களை கடையில் தடுத்து வைத்து தந்திரிமலை ரஜமஹா விஹாரைக்கு முன்னால் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)