இடைநிறுத்தப்பட்டிருந்த 62 மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் விசேட உத்தரவுக்கு அமைய இவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாகக் கூறி அதன் தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடமையை செய்யாமல் தவிர்க்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் 62 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் விசேட உத்தரவின் பேரில் குறித்த ஊழியர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, இழந்த சலுகைகள் மீண்டும் பெற்றுக் கொடுக்கப்பட்டது போன்று தண்டனைகள் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், குறித்த ஊழியர்கள் நேற்று (24) எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியை சந்தித்திருந்தனர்