மூதூர் பிரதேச செயலகத்தினால் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு
நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீலமைப்பு அமைப்பின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூர் பிரதேச செயலகத்தினால் பொருளாதாரத்தில் நலிவுற்று பின்தங்கிய குடும்பங்களுக்கா வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிராம சகவாழ்வு சங்கத்தின் பரிந்துரைக்கு அமைவாக 24/12/2024 அன்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பீ.அரபாத் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
(எஸ். ஏ.பறூஸ்)