ரொனால்டோவுடன் இணைந்து விளையாட வேண்டும்; எம்பாப்பே
உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக இளம் நட்சத்திர வீரரான பிரான்ஸின் கிளையன் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலக உதைப்பந்தாட்டத்தின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான மாறியிருப்பவர்தான் பிரான்ஸின் முன்கள வீரரான கிளையன் எம்பாப்பே. பிரான்ஸின் பாரிஸ் சையிண்ட் ஜெர்மனி கழகத்தில் எம்பாப்பே லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து சில ஆண்டுகள் விளையாடியிருந்தார். பின்னர் மெஸ்ஸி அமெரிக்க கழகத்துடன் ஒப்பந்தம் செய்து பிரான்ஸ் கழகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
இந்நிலைரயில் லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடியதை தன்னால் மறக்கவே முடியாது என கூறியிருக்கின்றார் எம்பாப்பே. அதைப்போல உதைப்பந்தாட்ட உலகில் மேலும் ஒரு சிறந்த வீரரான பிரேஸிலின் நெய்மர் உடனும் இணைந்து விளையாடியிருக்கிறார்.
ஆனால் உலகின் பல பில்லியன் ரசிகர்களைக் கொண்ட போர்த்துக்கல் அணியின் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் மட்டும் எம்பாப்பே இதுவரையில் இணைந்து விளையாடியதே இல்லை. அவருடன் தான் இணைந்து விளையாட வேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் எம்பாப்பே தெரிவித்திருக்கின்றார். பி.எஸ்.ஜி அணியை விட்டு வெளியேறிய பிறகு எம்பாப்பே ரியல்மாட்ரிட் அணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரொனால்டோ தற்சமயம் சவுதி அரேபியாவின் அல் நசர் கழகத்தில் ஒப்பந்தமாகி விளையாடி வருவதனால் எம்பாப்பேவின் ஆசை கனவாகவே ஆகலாம் எனலாம்.