மாவனல்லை நூராணியாவில் Futsal blitz -2024
மாவனல்லை உயன்வத்தை நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க, மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் Futsal blitz 2024(NOBA) எனும் தொனிப் பொருளில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்ச்சி பல பிரிவுகளாக அக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு எம்.ஆர்.எம்.அக்ரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்ச்சியில் இவ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுகளில் இருந்து வந்து கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.வெற்றிப் பெற்ற அணியினருக்குஇங்கு அதிதிகள் மூலம் கேடயங்களும் வழங்கப்பட்டன.
(பாரா தாஹீர் – மாவனல்லை செய்தியாளர்)