சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் காத்தான்குடிக்கு வருகை
சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் அஷ்ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி
எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ,ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களுக்கு வருகைதரவுள்ளதுடன் காத்தான்குடி அல் அக்ஷா பள்ளிவாயலில் குத்பா உரையினையும் ஜும்மாத்தொழுகையினையும் நடாத்தவுள்ளார்.
மேலும் ஏறாவூர் ஓட்டுப்பள்ளி ஜும்மா பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையினையும், வாழைச்சேனை முகைத்தீன் ஜும்மா பள்ளிவாயலில் இஷாத் தொழுகையினையும் நிகழ்த்தவுள்ளார். அவர் சஊதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அஷ்ஷெய்க் சுதைஸ் அவர்களின் குரல் உட்பட பல இமாம்களின் குரலில் குர்ஆனை ஓதக்கூடிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(சீனிஸ்கான்)