உள்நாடு

“வித்தகர்” விருது பெற்றார்சாய்ந்தமருது யூ.எல். ஆதம்பாவா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடைபெற்ற இலக்கிய விழாவில் அகில இலங்கை சமாதான நீதவானும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான அல்ஹாஜ் யூ.எல். ஆதம்பாவா “வித்தகர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இவர் சிறுவயது முதல் தற்போது வரை நாட்டார் பாடல்களைப் பாடியும், எழுதியும் வருகின்ற அதேவேளை, அவற்றை நூல் வடிவிலும் தொகுத்து “கிராமத்து மண்வாசம்”, “தென்கிழக்கின் பாரம்பரியம்” என்ற பெயரில் வெளியிட்டிருக்கின்றார்.

அத்தோடு பிரதேச. மாவட்ட, மாகாண மட்ட போட்டிகளிலும் பங்குபற்றி பல விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த மர்ஹும்களான அஹமட் லெப்பை உதுமாலெப்பை, உதுமாலெப்பை றஹ்மத்தும்மா தம்பதிகளின் 3ஆவது மகன் என்பதுடன் ஜீ.எம்.எம்.எஸ்.வீதி, சாய்ந்தமருது – 09 ஆம் பிரிவிலும் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *