கற்பிட்டி ஆபத்தொழி மஸ்ஜிதுல் றஹ்மான் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா
கற்பிட்டி ஆபத்தொழி மஸஜிதுல் றஹ்மான் பாலர் பாடசாலையின் பத்தாவது வருடாந்த கலை விழா நிகழ்வுகள் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.ஏ.எம் இக்மால் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி நகரின் ஏனைய பாலர் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் இஸ்லாமிய மற்றும் கலை ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் மஸ்ஜிதுல் றஹ்மான் பாலர் பாடசாலை ஆசிரியர்களான எம்.எஸ் சஜானஸ், எம்.ஐ.எப் சஹானா மற்றும் எம்.எஸ் றிப்னத் ஆகியோரின் முயற்சியினால் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றதுடன் பங்கு பற்றிய சகல மாணவர்களுங்கும் பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)