இந்த ஆண்டில் 50 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
இவ்வருடம் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும். அந்த சந்தர்ப்பங்களில் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் பெறப்பட்டுள்ளதாகவும் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மின்சாரம் எடுப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்.இதற்கு பொது மக்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1987 அல்லது 0112118767 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அனுமதியில்லாத மின் பாவனை தொடர்பில் தகவல்களை சபைக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)