உஸ்கெல்லேவ விபத்தில் ஒருவர் பலி
கெப்பித்தகொல்லாவ பதவிய வீதியில் உஸ்கொல்லேவ பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் கெப் வாகனம் ஒன்றுடன் மோதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கெப்பித்தகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கல்நேவ பகுதியில் அமைந்துள்ள திரையரங்குக்கு அருகில் வசித்து வரும் 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்தகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
(எம்.ரீ . ஆரிப் அனுராதபுரம்)