ஹட்டன் பஸ் விபத்து. சாரதிக்கு மறியல்.
ஹட்டன் – கண்டி பஸ் விபத்தில் காயமடைந்துடிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராம்மூர்த்தி இன்று (22) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், சந்தேகநபரான சாரதியின் நிலை குறித்து வைத்தியர்களிடம் கேட்டறிந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.