உலகம்

நரேந்திர மோடிக்கு குவைத்தின் அதி உயர் விருது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al Kabeer) விருது இன்று (22) வழங்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்புக்காக குவைத் இந்த கெளரவ விருதினை அவருக்கு வழங்கியது.

குவைத்தின் பயான் அரண்மனையில் வைத்து குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவிடம் இருந்து பிரதமர் மோடி இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ என்பது குவைத்தின் மாவீரர் பட்டமாகும்.இது நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரச குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர், பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ் மற்றும் ஜார்ஜ் புஷ் போன்ற உலகத் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.“குவைத்தின் உயரிய அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ் அவர்களால் முபாரக் அல்-கபீர் விருது வழங்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

இந்த கௌரவத்தை இந்திய மக்களுக்கும் இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக நான் அர்ப்பணிக்கிறேன்” என தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *