உள்நாடு

செல்பியால் வந்த வினை. தாயும், மகளும் ரயிலில் மோதி பலி.

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற தாயும் மகளும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது வரும் டைகொண்டோ போட்டியில் பங்கேற்க வந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி பகுதியில் இருந்து அனுராதபுரத்திற்கு வருகை தந்த இவர்கள் அனுராதபுரம் புதிய நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலின் முன் செல்ஃபி எடுக்க முயன்ற போது புகையிரதத்தில் மோதிய நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 37 வயதுடைய தாயும் 18 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *