சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பெருமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் காரியாலயத்துக்கு தேவையான மிகப் பெருமதியான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு மிக நீண்ட காலத்தேவையாக காணப்பட்டு வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் அவர்களினால், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸடீனிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்த உபகரணங்களும், தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு (21) குறித்த, அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸடீன் அவர்களினால் போட்டோ கொப்பி மெஷின், பெக்ஸ் மெஷின் மற்றும் மேசை, கதிரைகள் என்பனவற்றை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சி.எம்.மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(அபு அலா)