ஓட்டமாவடியைச் சேர்ந்த முகம்மது தலிபா (ஹனிபாக்கா) என்பவரைக்காணவில்லை
ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னால் வாழைப்பழக்கடை நடத்தி வந்த “ஹனிபாக்கா” என்று அனைவராலும் அறியப்பட்ட முகம்மது தலிபா என்பவரை கடந்த 17ம் திகதி (17/12/2024) முதல் காணவில்லை.
இவர் சிறிது சுகயீனமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், புத்தளத்தில் காணப்பட்டதாக 19ம் திகதி தகவல் கிடைத்து, அதன் பிறகு குறித்த தகவலை அறிவித்தவர் மீண்டும் அங்கும் அவரைக்காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு இதுவரை அவரைப்பற்றிய மேலதிகத்தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. முகம்மது தலிபா தொடர்பாக தகவல் தெரிந்தால், தயவு செய்து 0775698883 (மனைவி) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.