உள்நாடு

இலக்கிய, ஊடக ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு.


தினகரன், தினமின, டெய்லி நியுஸ், மற்றும் காவேரிக் கலா மன்றம் என்பன இணைந்து நடாத்திய இலக்கிய ஊடக ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (21) லேக் ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சாவித்திரி போல்ராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தேசிய ஒருமைப்பாடுகள் மற்றும் தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வரவேற்புரையை தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவரும், அறிமுக உரையை பேராசிரியர் துரை மனோகரனும் வழங்கியதுடன் அதிதிகளின் உரைகளும் இடம் பெற்றன.


இதன்போது தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரையை வைத்தியர் டிலினி விஜயசேகர வழங்கியதுடன் காவேரிக் கலா மன்றம் தொடர்பான உரையை அதன் திட்டப் பணிப்பாளர் ஐ. சஹானாவும், அலியன்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ரகு பாலச்சந்திரன் ஆகியோரும் வழங்கினார்.


நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிசிர யாப்பா, நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல, ஹாசிம் உமர் பவுண்டேசின் ஸ்தாபகர் ஹாசிம் உமர் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது இலக்கிய ஊடக ஆளுமைகளுக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள், பொற்கிளி என்பன வழங்கி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *