கராகொடை அல் ஹிக்மாவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை, பகல கராகொடையில் அமையப்பெற்றிருக்கும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மத்ரஸாக் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறிச்செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் என்பன அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.15 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வரும் இம்மத்ரஸா, இப்பகுதி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மாணவர்களின் ஒழுக்கம், வணக்க வழிபாடுகள், இதர முன்மாதிரி மிக்க செயற்பாடுகளில் இம்மத்ரஸா முக்கிய பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் விசேட அதிதியாக அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, விஷேட அதிதியாகக் கலந்து சிறப்பித்த அஷ்ஷேக் ஹஸன் பாரிஸ் மதனி அவர்களின் உரையும் இடம்பெற்றது. ஊரின் முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள், மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவ மாணவிகள் என பலரின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்ற இந்நிகழ்வுகள், மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்க் A.K. முஹம்மத் அவர்களின் வழிகாட்டலுடனும் நெறிப்படுத்தலுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததோடு, நிகழ்ச்சிகளை மத்ரஸாவின் பழைய மாணவர்களான முஆத் மற்றும் நஜீப் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.நிகழ்வில் விசேட அதிதியின் உரை இடம்பெறுவதையும், குர்ஆன் மத்ரஸா சார்பில் நிர்வாக சபைத் தலைவர் சகோதரர் மாஹிர் ஸாதிக் அவர்கள் விசேட அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பதையும், சான்றிதழ் பெற்று வெளியேறிச்செல்லும் மாணவர்களுடன் மத்ரஸா அதிபர் அஷ்ஷெய்க் ஏ.கே. முஹம்மத் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் இருப்பதையும், கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.