இருளடைந்த வீதிகளுக்கு ஒளியூட்டும் வேலைத்திட்டம்!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்கு பகுதிக்குட்பட்ட வீதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புக்கள் சேதமடைந்து, மின்குமிழ்கள் பழுதடைந்து காணப்பட்டன.
இதனைக் கருத்திற் கொண்ட சமூக செயற்பாட்டாளரும் மொடர்ன் நிறுவன உரிமையாளருமான ஐ.எம்.றிஸ்வின் தனது சொந்த நிதியிலிருந்து இருளடைந்த வீதிகளுக்கு ஒளியூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்ட சமூக செயற்பாட்டாளர் ஐ.எம்.றிஸ்வினின் செயற்பாட்டிற்கு பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.




(எச்.எம்.எம்.பர்ஸான்)