உள்நாடு

ஹிங்குராகொட சதொச வளாகத்துக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயம்.

பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த ஹிங்குராக்கொட சதொத ஆலையின் களஞ்சிய வளாகத்திற்கு  வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயமொன்றை (19) மேற்கொண்டிருந்தார்.

5000 மெட்ரிக் டொன் கொள்ளளவு கொண்ட இக் களஞ்சிய சாலை பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள களஞ்சிய ஆலை வளாகத்தை சீர்செய்து எதிர் வரும்  பருவ கால அறுவடை நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழு இந்த களஞ்சியசாலையை   பயன்பாட்டிற்கு சீர் செய்வதற்கு முன்வந்துள்ளனர் .இந்நிகழ்வில் நெல் விற்பனை வாரியத் தலைவர் , கூட்டுறவு மொத்த விற்பனையாளர் கழக தலைவர் , உணவு ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *