உள்நாடு

நாச்சியாதீவு மு.ம.வியில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

அநுராதபுரம் நாச்சியாதீவு முஸ்லிம் மஹாவித்தியாலத்தில் புதிய மாணவத் தலைவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக் கிழமை‌ (13.12.2024) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

மாணவத் தலைவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மூலமாக சின்னம் அணிவிக்கப்பட்டதோடு பாடசாலை ஆசிரியர்கள் மூலம் சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவத் தலைவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து தமது பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பிரதம மாணவத் தலைவனாக (Head Prefect) 13 A வகுப்பைச் சேர்ந்த மாணவன் நசீப், பிரதம மாணவத் தலைவியாக (Head Prefect) 13 A வகுப்பைச் சேர்ந்த மாணவி பஸீஹா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். உதவி மாணவத் தலைவனாக (Head Prefect) 13 A வகுப்பைச் சேர்ந்த மாணவன் சாஹில், உதவி மாணவத் தலைவியாக (Head Prefect) 13 A வகுப்பைச் சேர்ந்த மாணவி நதா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *