எயார் வைஸ் மார்ஷல் ஆர.எஸ்.விக்ரமரத்னவுக்கு பேருவளை ஸன்ரைஸின் விஷேட மலர் கையளிப்பு.
உதைப்பந்தாட்டத்துறையில் புகழ் பெற்ற விழையாட்டுக் கழகமான பேருவளை சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகம் தனது 50வது வருட பூர்த்தி விழாவை மிக விமர்சையாக அண்மையில் நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் கொண்டாடியது.
பேருவளை சிமிச் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றுக்கு வருகை தந்த ஏயர் வைஸ் மாஷல் (Air vice marshal) ஆர்.எஸ் விக்ரமரத்னவுக்கு அன்ஸார் ஜுனைத் செயலாளர் எம். ஹிஸான் ஹாஷிம் ஆகியோர் 50 வருட பூர்த்தியையொட்டி வெளியிடப்பட்ட விஷேட மலரை கையளிப்பதையும், கழக உறுப்பினர்கள் உடனிருப்பதையும் காணலாம்.
சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகம் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய ஓர் கழகமாகும்.
(படங்கள்: பேருவளை பீ.எம் முக்தார்)