அமைச்சரவைத் தீர்மானங்கள்
2024.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
- பண்டங்கள், வேலைகள் மற்றும் ஆலோசனையல்லாத சேவைகள் ஆகியன பற்றிய பெறுகை வழிகாட்டல்கள் – 2024
அரசியலமைப்பின் 156ஆ(1) இன் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்பின் 156இ(1) இன் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய அனைத்து அரச நிறுவனங்களாலும் பண்டங்கள் மற்றும் சேவைகள், வேலைகள், ஆலோசனைச் சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நியாயமான, ஒப்புரவான, வெளிப்படையான, போட்டியான மற்றும் செலவுத்திறனான நடவடிக்கை முறைகளையும் வழிகாட்டிநெறிகளையும் வகுத்தமைத்தல் குறித்த ஆணைக்குழுவின் பணிகளாகும். அதற்கமைய, தயரிக்கப்பட்டுள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களின் பெறுகைக்கான பண்டங்கள் மற்றும் சேவைகள், வேலைகள், ஆலோசனையல்லாத சேவைகள் ஆகியவற்றுக்கும் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விடயங்களுக்கும், அவற்றின் இடைநேர் விளைவான விடயங்களுக்கான வழிகாட்டல்கள் – 2024, 2412ஃ01 ஆம் இலக்க 2024.11.25 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வழிகாட்டிநெறிக் கோவையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - அரசுக்கு சொந்தமான வர்த்தக ரீதியற்ற நிறுவனங்கள் தொடர்பான மீளாய்வு
அத்தியாவசிய பொதுச் சேவைகள் வழங்கல், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்தல், பல்வேறு ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளல், பண்டங்கள் மற்றும் சேவைகள் வழங்களுக்குரிய சந்தை நடவடிக்கைகளில் இடையீடு செய்தல், வளங்களை நியாயமாக பகிர்ந்தளித்தல், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சமுதாய நலன்புரிகள் போன்ற முக்கிய பணிகள் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் தவிர்ந்த 86 திணைக்களங்கள், 25 மாவட்டச் செயலகங்கள் மற்றும் 339 பிரதேச செயலகங்கள், அரசுக்கு சொந்தமான 340 தொழில்முயற்சிகள் மற்றும் வர்த்தகரீதியற்ற 115 நியதிச்சட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கிவருகின்றன. தேசிய வரவுசெலவு திட்டத்தின் கண்காணிப்பின் கீழ் காணப்படுகின்ற வர்த்தக ரீதியற்ற 115 அரச நியதிச்சட்ட நிறுவனங்களுக்காக மற்றும் அரச தொழில்முயற்சித் திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்ற 51 நிறுவனங்களுக்காக 2021ஆம் ஆண்டில் தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 140 பில்லியன் ரூபாயகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சமகாலத் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் குறித்த நிறுவனங்கள் இற்றைப்படுத்தப்படாமை, ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதாக இன்மை அல்லது பொருத்தமின்மை, குறித்த நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் தனியார் துறையினரால் மிகவும் வினைத்திறனான வகையில் மேற்கொள்ளப்படல் மற்றும் ஒரே ஒத்த பணிகளை மேற்காள்கின்ற நிறுவனங்கள் ஒருசிலவும் காணப்படுகின்றனமை போன்ற விடயங்களால் அரசுக்குச் சொந்தமான வர்த்தகரீதியற்ற நிறுவனங்கள் தொடர்பாக மீளாய்வு மேற்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்கமைய அவ்வாறான மீளாய்வை மேற்கொண்டு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - டிஜிட்டல் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பரிமாற்றம் செய்கின்ற ஒத்துழைப்புக்கள் தொடர்பாக இந்திய அரசு மற்றும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தகவல் தொழிநுட்பத்தின் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னணி வகிக்கின்ற இந்திய இலத்திரனியல் – அரச நிர்வாகம், நிதித் தொழிநுட்ப முறைமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் பெற்றுக் கொண்டுள்ள விசேட நிபுணத்துவ அறிவு பல்வித செயற்பாடுகள் மூலமாக இலங்கையில் டிஜிட்டல் அபிவிருத்திக்குப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை கிட்டியுள்ளது. அதற்கமைய, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இந்தியாவின் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்புக்கும் இடையிலான ஆரம்ப உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன்மூலம், டிஜிட்டல் அபிவிருத்தித் துறையில் அதிகாரிகளின் இயலளவு விருத்திக்கும் மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தித் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் போது இரு நாடுகளுக்கிடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான இயலுமை கிட்டியுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - இலங்கை பொலிசுக்கான வாகனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதியுதவி
இலங்கை பொலிசுக்கான வாகனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசால் இலங்கைக்கு 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நன்கொடையைப் பயன்படுத்தி வடமாகாணத்தின் பொலிஸ் நிலையங்களின் நடவடிக்கைகளுக்குத் தேவையான கெப் வண்டிகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்காக இருதரப்புக்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உயர் பாரம்பரிய பால் மாடுகளை இறக்குமதி செய்தல்
உயரிய தரத்திலான மரபணு இயலுமைகளைக் கொண்டுள்ள பால் மாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும், குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளால் தேவையான பால் மாடுகளை விநியோகிப்பதற்கு இதுவரைக்கும் இயலாமல் போயுள்ளது. அதனால் நேரடியாக இரண்டு அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களாகப் பொருத்தமான கறவை மாடுகளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமை தொடர்பாக நாடுகள் சிலவற்றிலிருந்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இடையீட்டின் கீழ் பாகிஸ்தான் வணிக அபிவிருத்தி அதிகாரசபையால் சஹிவால் (ளூயாறையட) மற்றும் நிலிரவி (Nடைசையஎi) வகைகளைச் சார்ந்த ஏழு (07) சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை எமது நாட்டுக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை இறக்குமதி செய்து சுக்கிலங்களை விருத்தி செய்யும் வரைக்கும் சஹிவால் வகையைச் சார்ந்த 20,000 சுக்கில சினைகளை இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்திச் சபை மூலம், அரசுகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களாகக் கொள்வனவு செய்வது பொருத்தமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் சஹிவால் இனத்தைச் சேர்ந்த ஐந்து (05) பால் மாடுகள் மற்றும் நிலிரவி இனத்தைச் சேர்ந்த இரண்டு (02) இனையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அபிவிருத்திச் சபையின் அரசுகளுக்கிடையிலான கொள்வனவாகப் பெற்றுக் கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2025 ஆம் ஆண்டுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் பிறபொருட்களைக் கொள்வனவு செய்தல்
உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், புதிய டயர்களை விநியோகித்தல், பிராந்தியங்களுக்கான டயர் பொருத்தும் சேவைகளை வழங்கும் நிறுவனத்தைத் தெரிவு செய்தல், கிறீஸ் மற்றும் உராய்வு எண்ணெய் விநியோகித்தல் மற்றும் புதிய இயந்திரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கான 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுகையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறித்த பெறுகைகளில் நான்கு (04) பெறுகைகள் அமைச்சின் பெறுகைக் குழு அங்கீகார எல்லையைக் கடந்து செல்வதால், குறித்த பெறுகை நடவடிக்கைகளை அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவுக்கு ஒப்படைக்க வேண்டியுள்ளது. அதற்கிணங்க, குறித்த பெறுகையை வேறு வேறாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக குறித்த நான்கு (04) பெறுகைகளுக்கும் வேறுவேறாக தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் 04 இனை நியமிப்பதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - நீர் வழங்கல் மற்றும் சுகாதார நலத்தை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலதிக நிதியொதுக்கீடு செய்தல்
முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலியா போன்ற 07 மாவட்டங்களில் 540 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு குழாய் நீர் சேவைகளுக்கான அணுகல்களை அதிகரிப்பதற்கும் சுகாதாரநல வசதிகளை மேம்படுத்துவதற்குமான “நீர் வழங்கல் மற்றும் சுகாதார நலத்தை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்” ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக உலக வங்கியின் முதலீட்டுக் கருத்திட்ட நிதியிடல் பத்திரத்தின் கீழ் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் 165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் விடயப்பரப்பை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக உலக வங்கியின் மேலதிக நிதிக்கூறு (இரண்டாம் கட்டம்) அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன்கீழ் மாத்தறை, குருநாகல், மாத்தளை மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களிலும் குழாய்நீர் வழியை நீடிப்பதற்கான கருத்திட்டத்தை அடையாளங்கண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2025.06.30 ஆகும் போது கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருப்பினும், நிர்மாணப் பணிகளின் செலவு அதிகரித்தமை மற்றும் பெறுமதிசேர்வரி (ஏயுவு) திருத்தம் செய்யப்பட்டமை போன்ற விடயங்களால் கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீடு 1,180 மில்லியன் ரூபாய்கள் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்வதற்கும், தேவையான மேலதிக நிதியை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள்ஃமுன்பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம்
முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகத்தால் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் சுகாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டலின் கீழ் எடை குறைந்த பிள்ளைகள் அதிகமாகவுள்ள முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள்ஃமுன்பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு 60ஃ- வழங்கப்படுவதுடன், 2025 ஆம் ஆண்டில் 155,000 பிள்ளைகள் பயனடையவுள்ளனர். சமகாலத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால், ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற 60ஃ- தொகை போதுமானதாக இன்மையால், குறித்த தொகையை 100ஃ- ரூபாவாக அதிகரிப்பதற்கும், “எடை குறைந்த பிள்ளைகள் அதிகமாகக் காணப்படுகின்ற முன்பள்ளிகள்” எனும் அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்படுகின்ற முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள்ஃமுன்பள்ளிகளின் குறித்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - வன்முறைகளால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக தற்காலிக பாதுகாப்பு இல்லங்களை நிர்வகித்தல்
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தற்காலிகப் பாதுகாப்பு வழங்குவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் கம்பஹா, இரத்தினபுரி, மொனறாகலை, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஒரு பாதுகாப்பு இல்லமும், அநுராதபுர மாவட்டத்தில் 02 பாதுகாப்பு இல்லங்களுமாக மொத்தம் 10 இல்லங்கள் நடாத்திச் செல்லப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்திற்கான பாதுகாப்பு இல்லமொன்றை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருசில பாதுகாப்பு இல்லங்களில் நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நேரடியாகப் பொறுப்பேற்றுள்ளதுடன், ஒருசில இல்லங்களுக்கான செலவுகள் பெண்கள் நலன்புரிசார் அமைப்புக்கள் சிலவற்றால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 2020 தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரை இரண்டாம் காலாண்டு வரை 2852 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக 60.35 மில்லியன் ரூபாய்கள் செலவாகியுள்ளது. ஆனாலும், குறித்த காலப்பகுதியில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கு 37.69 மில்லயன் ரூபாய்கள் மாத்திரமே நிதியொதுக்கீடு கிடைத்துள்ளதுடன், 22 மில்லியன் ரூபாய்கள் கொண்ட செலவுறுதிச் சிட்டைகள் தொடர்ந்தும் ஈடுசெய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவைக் கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 25 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்வதற்கும், பின்னர் அடுத்துவரும் ஆண்டுக்குத் தேவையான நிதியொதுக்கீட்டை வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் மூலம் ஒதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியில் செயற்கை ஓட்டப் பாதையை சர்வதேச தரநிர்ணயங்களுக்கு ஏற்ற வகையில் மீளமைத்தல்
சுகததாச சர்வதேச விளையாட்டுத் தொகுதியானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முதற்தர விளையாட்டு வசதிகளை வழங்கும் விளையாட்டுத் தொகுதியாவதுடன், அனைத்து வசதிகள் மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுடன் 400 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 80 மீற்றர் செயற்கை ஓட்டப் பாதையை கொண்டமைந்த விளையாட்டுத் தொகுதியாகும். 2018 ஆம் ஆண்டில் மேற்குறித்த செயற்கை ஓட்டப் பாதை மீள அமைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பல குறைபாடுகள் காணப்படுவதால் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்குக் கூட பொருத்தமற்ற நிலையில் இருப்பதாக இலங்கை தடகள விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்கு விளையாட்டு வீரர்களை அனுப்புவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் மேற்குறித்த ஓட்டப் பாதையை சர்வதேச தரநிர்ணயங்களுக்கமைய புனரமைப்பு செய்வதற்கு தேசிய ரீதியில் முன்னுரிமை வழங்க வேண்டியதொரு பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகததாச தேசிய விளையாட்டு தொகுதியின் செயற்கை ஓட்டப் பாதையை மீளமைத்தல், ஓட்டப் பாதையின் மையத்தில்; அமைந்துள்ள காற்பந்து மைதானத்தை தயார் செய்தல், அதற்குத் தேவையான இலத்திரனியல் நேரக்கணிப்பு இயந்திரத்தை பொருத்துதல் மற்றும் மின்விளக்குக் கோபுரங்களை மறுசீரமைத்தல் போன்ற பணிகளை உரிய பெறுகைச் செயன்முறைகளைக் கடைப்பிடித்து மேற்கொள்வதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. - 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலவாணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் புதிய ஒழுங்குவிதிகளை வெளியிடுதல்
நாட்டின் வெளிநாட்டு செலவாணிக் கையிருப்பை பாதுகாப்பதற்காக சில மூலதன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான நேரெதிர் பண அனுப்பல்களின் தற்காலிக ஏற்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மூலதனப் பாய்ச்சல் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் விதந்துரைகளுக்கமைய 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலவாணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ் 2020-04-02 திகதியிலிருந்து அவ்வப்போது ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் வெளிநாட்டுச் செலவாணிச் சந்தையில் ஏற்பட்டுள்ள விருத்தி மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளை கருத்திலெடுத்து, சில கைவிடுதல்கள் ஃ வரையறுத்தல்களை படிப்படியாக நீக்கும் ஃ தளர்த்தும் நோக்கத்துடன் 2023 யூன் மாதத்திலிருந்து இதுவரை 10 ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தற்போது அமுலிலுள்ள ஒழுங்குவிதிகளின் செல்லுபடியாகும் காலம் 2024-12-19 திகதியன்று முடிவடையவுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஒழுங்குவிதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள சில கைவிடுதல்கள் மற்றும் வரையறுத்தல்களை மேலும் திருத்தம் செய்து 2025 யூன் மாதம் வரை அமுலாகும் வகையில் புதிய ஒழுங்குவிதிகளை வெளியிடுதல் பொருத்தமானதென இலங்கை மத்திய வங்கியால் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய 2024-12-20 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் ஆறு (06) மாத காலத்துக்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலவாணிச் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. - 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்.
கிளிங்கர், சீமேந்து கையிருப்புகள் மற்றும் சீமேந்து சில்லறை வர்த்தகப் பொதிகளாகவுள்ள பைகளை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோகிராமுக்கு ரூபா 1ஃ- வீதம் செஸ் தீர்வை வரியைக் குறைப்பதற்கும், கட்டுமானப் பணிகளுக்காக சுற்றாடல் விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரின் விதந்துரையின் கீழ் 01 மில்லியன் மெற்ரிக் தொன்கள் வரை கருங்கல் தொகுதியை ஏற்றுமதி செய்தல் மற்றும் 01 கியூபிக் மீற்றருக்கு ரூபா 1,000ஃ- தொகையான செஸ் தீர்வை வரியை விதித்து அறவிடுவதற்கும், குறித்த காலத்தில் நிதி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் உடன்பாட்டுடன் குறித்த காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழான ஒழுங்குவிதி 2400ஃ25 இலக்க 2024-09-05 திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய மேற்குறிப்பிட்ட ஒழுங்குவிதியை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. - நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
2025 ஆண்டில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பரஸ்பர மதிப்பீட்டின் போது, சிறந்த இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்ட ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டிய தேவை பணத் தூய்மையாக்கலை தடுப்பதற்கான கொள்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசுகளுக்கிடையிலான அமைப்பான நிதிச் செயலாற்றுகை செயலணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் உத்தேச திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த உத்தேச திருத்தங்களை உள்ளடக்கி நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. - உப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உப்பு இறக்குமதி செய்தல்
இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு விளைச்சல் குறிப்பாக காலநிலையில் தங்கியுள்ளது. நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை 2025-01-31 திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. - 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்துதல்.
தனிக்கூட்டு வரியாக அமுல்படுத்தப்படும் விசேட வியாபார பண்ட அறவீட்டின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 63 பண்டங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென 2024-03-25 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மேற்குறித்த சட்டத்தை இரத்துச் செய்வதால் விசேட வியாபார பண்ட அறவீட்டு வரியுடன் தொடர்;புடைய பண்டங்களை இறக்குமதி செய்யும் போது, பெறுமதி சேர் வரி அடங்கலாக ஏனைய வரிகளும் சேர்வதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலை தொடர்பில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் உள்நாட்டு விவசாயிகளுக்கு வசதிகளை வழங்கும் அரச கொள்கைகளில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களையும் கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துதல் பொருத்தமானதென தெரியவந்துள்ளது. ஆகவே, மேற்குறித்த வரியை மாற்றம் செய்வதற்காக 2024-03-25 திகதி அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்தாதிருப்பதற்கும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்ட அறவீட்டுச் கீழான பண்டங்களுக்கு விசேட வியாபார பண்ட அறவீட்டு வரி வீதத்தை 2025-01-01 திகதி தொடக்கம் அமுல்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.