நிஸாம் காரியப்பர் எம்.பீ.யாக சத்தியப் பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்த நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (18) காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் கூடிய ஐந்து உறுப்பினர்களை கொண்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகின.
இதன்படி மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.