மரக்கிளை வீழ்ந்ததில் சிறுவன் பலி
ஹொரவப்போத்தானை எலபத்வெவ பகுதியில் உள்ள பாலர் பாடசாலை முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மீது மரக்கிளை உடைந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
எலபத்வெவ மொரகேவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.நெஸது துலாஷ் பெரேரா என்ற 05 வயது 06 மாதமுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.
மொரகேவ பகுதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த சிறுவன் பாடசாலை முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயத்திற்குள்ளான நிலையில் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)