பத்திரிகை பேரவை ஊடக கெளரவ விழாவில் உதயம் ஆசிரியருக்கு கெளரவம்
இலங்கை பத்திரிகை பேரவையின் 69 வது ஆண்டு விழா ,டி.எஸ்.காரியகரவன நினைவு தினம், ஊடக கெளரவ விழா என்பன இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஊடக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஊடக பிரதானிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இந்த நாட்டின் ஊடகத் துறைக்கு மிகப் பெரும் பங்காற்றிய 10 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தயா லங்காபுர, வீ.தனபாலசிங்கம், சீலா விக்கிரமசிங்க, பி.பி.இலங்கசிங்க, உபாலி அரம்பேவல, என்.எம்.அமீன், ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.எஸ்.செல்வநாயகம், துசித்த மலலசேகர, அலெக்சாண்டர் பாலசூரிய ஆகியோரே கெளரவிக்கப்படவுள்ளனர்.