உள்நாடு

போலியான கல்விச் சான்றிதழ்கள், தகவல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி ஆசிரியர்கள் சேவை நிறுத்தம்

போலியான கல்விச் சான்றிதழ்கள், தகவல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி ஆசிரியர்கள் சேவை நிறுத்தம்வடமத்திய மாகாணத்தில் போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதான அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு தொடக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாயாற்றுவதற்காக அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 பட்டதாரி மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எட்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள்.

ஆசிரியர்களாக சேவையில் சேரும் போது சமர்ப்பிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரம் ,உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக பிரதான அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

இந்த ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களைச்  சரிபார்க்க மாகாண போது சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் பட்டதாரிகளில் சிலர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்ததற்கான போலியான பட்டச்சான்றிழை சமர்ப்பித்துள்ள தாகவும் அந்த குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *