வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்த இக்ரா பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள்
கஹட்டோவிட்ட இக்ரா பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (14) அன்று திவானி மண்டப வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாலர் பாடசாலையின் பிரதம ஆசிரியர் திருமதி ருமைஸா அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கலைவிழாவில் இக்ரா பாலர் பாடசாலையின் அனைத்து மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆடல் , பாடல் , ஓதுதல் , நாடகம் , போன்ற மாணவர்களின் வெளிக்கள செயற்பாடுகளுடன் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
கலை நிகழ்ச்சிகளின் இறுதியில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.





