ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்; ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவுடனான சந்திப்பின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாகவும்,
மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய ராஜாங்க அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் திசநாயகாவை வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை திசநாயகா தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறுகையில், ‘இந்தியா-இலங்கை பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். பொருளாதாரம், முதலீடு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பு அமைந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை காலையில் புதுதில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிவப்பு கம்பளம் மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் விரிவான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து, இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்தியாவுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளையும் அவர் இலங்கை அதிபரிடம் தெரிவித்ததாக என கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கபேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ”இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது இலங்கையிலும் அது கொண்டாடப்பட்டது. சென்னை – யாழ்பானம் இடையேயான விமான சேவை, கப்பல் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இந்த விஷயத்தில், மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
இலங்கையில் கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பேசினோம். தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.
இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முயற்சியில் இந்தியா எப்போது நம்பகமான அண்டை நாடாக இருக்கும் என்று திசநாயகவிடம் நான் உறுதியளித்துள்ளேன்.
நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும். இயற்கை பேரிடரின் போதும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். இலங்கையின் பால் வளம் மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதைத்தொடர்ந்து புதுதில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்ச்சியிலும் இலங்கை ஜனாதிபதி பங்கேற்கிறார். பின்னர் அவர் பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு செல்ல உள்ளார்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது