புத்தளம் கரைத்தீவில் 67 ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் கரைத்தீவு உலமாக்கள் மற்றும் கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகம் இணைந்து 11.12.2024 புதன்கிழமை கரைத்தீவில் ஒரு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இரவு 9.10 மணி தொடக்கம் இரவு 10.10 மணி வரை கரைத்தீவில் உள்ள 67 ஆலிம்கள் ஆலிமாக்கள் அனைவரையும் கெளரவிக்கும் நிகழ்வு கரைத்தீவு பெரிய பள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் 43 ஆலிம்கள் 24 ஆலிமாக்கள் அ.இ.ஜ.உ. புத்தளம் நகர கிளையின் ஊடாக நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
ஆலிமாக்களின் கெளரவ சின்னத்தை கணவன் மார்கள் பிள்ளைகள் மற்றும் தந்தைமார்கள் பெற்றுக் கொண்டனர்.
கரைத்தீவு மண்ணில் முதல் தடவை இவ்வாறான நிகழ்வு நடைப்பெறுவதை முன்னிட்டு ஊரில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அதைபோன்று கரைத்தீவு உலமாக்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்களால் அ.இ.ஜ.உ. புத்தளம் நகர கிளையின் உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகத்தையும் உலமாக்களையும் அல்லாஹூ தாஆலா பொருந்திக் கொள்வானாக
இதற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த வளவாளர்களுக்கும் ஜம்இய்யா நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது
இதற்காக உதவி செய்தவர்களின் குடும்பத்திலும் ஆரோக்கியத்திலும் வியாபாரத்திலும் அல்லாஹூதாஆலா பரகத் செய்வானாக












உலமாக்கள் விவகார உபக்குழு
தலைவர்
அஷ்ஷேக் ஸனூஸ் ரஹ்மானீ
அஷ்ஷேக் நஸ்பான் இஹ்யாயீ
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை