சிறப்பாக நடைபெற்ற டாக்டர் அஷ்ஷெய்ஹ். முஹம்மத் பாஸி (ரஹ்) அவர்களின் 28 வது வருட கத்தமுல் குர்ஆன்
பேருவளை சீனன்கோட்டை கங்கானம்கொடை நூராணிய்யா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்தம் நடைபெற்று வரும் ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னாள் செய்ஹுஸ் ஸஜ்ஜாதா டாக்டர் அஷ்செய்ஹ் முஹம்மத் பாஸி பின் செய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல் பாஸி அல் மக்கி, அஷ் ஷாதிலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரிலான, 28வது வருட கத்தமுல் குர்ஆன் மஜ்லிஸ் 12.12.2024 ஆம் திகதி நடைபெற்றது.
ஸாவிய்யா இமாம்மகளான, மெளலவி கத்தமுல் ஷாதுலி, எம்.எஸ் ஆஸாத் (அஜ்வதி), எம்.ஆர் அப்துர் ரஹ்மான் (அஷ்ஷாதுலி) ஆகியோர் தலைமையில் அஸர் தொழுகையை தொடர்ந்து கதமுல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா, யாகூதிய்யாவும் இடம் பெற்றது.
இஷா தொழுகையை தொடர்ந்து ஹழரா மஜ்லிஸும், அதன் பின்னர் முஸாக்கராவும், துஆவும் இடம் பெற்றது.
சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அஷ்ஷெய்ஹ். இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி- பீ.ஏ), மெளலவி எம்.எஸ் ஆஸாத் (அஜ்வதி), மெளலவி ஹாபிஸ். பர்ஹான் ரவுப் ஆகியோர் கழரா மஜ்லிஸை நடாத்தினர்.
மேற்படி, ஸாவிய்யா பரிபாலன குழு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியத்துஷ் ஷாலுலிய்யா கலாபீட அதிபர் மெளலவி எம் அஸ்மிகான் (முஅய்யதி) உட்பட, கலீபாக்கள், உலமாக்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், பெருமளவிலான இஹ்வான்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்னாரின் ஞாபகார்த்தமாக ஷாதுலிய்யா தரீக்காவை பின்பற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் ஞாபகர்த்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




(பேருவளை பீ.எம் முக்தார்)