மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்ஷெய்ஹ். அரபாத் கரீம் (நளீமி)
பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்தவரும், பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ். அரபாத் கரீம் (நளீமி) மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலாநிதி பட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டு பேருவளை சீனன்கோட்டையில் அல்-ஹாஜ் முஹம்மத் ஜிப்ரி மர்ஹூமா ஸித்தி நளீரா தம்பதிகளுக்கு புதல்வராக பிறந்த இவர் அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையில் கல்வியை தொடர்ந்து பின்னர் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு பரீட்சையில் தெரிவாகி அங்கு கல்வி கற்று பட்டதாரியானார்.
அதனைத் தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைமானிப் பட்டத்தை 2015 ஆம் ஆண்டு மலேசிய சர்வதேச இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.
இவர் 10இற்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அத்தோடு ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச ஆய்வு சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். மேலும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றும் இவர் சீனன்கோட்டை பவுன்டேஷனின் தலைவர் பதவி வகிப்பதோடு, பேருவளை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்திலும் முக்கிய பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

(பேருவளை பீ. எம் முக்தார்)