புதிய சபாநாயகர் செவ்வாயன்று தெரிவு..!
17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. பதவி விலகிய சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமாவை அடுத்து புதிய சபாநாயகர் தெரிவுக்கான வேட்பு மனு கோரப்படும்.அதன் பின் சபாநாயகருக்கான பெயர் முன் வைக்கப்பட்டதன் பின் வாக்கெடுப்பு அல்லது சபை முழு ஒப்புதலுடன் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.அரசுக்கு அதிகப் பெரும்பான்மை இருப்பதால் அரசு தரப்பினால் பெயர் குறிப்பிடப்படுபவர் புதிய சபாநாயகருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வார்.