அஸீஸ் எம் பாயிஸுக்கு இளங்கலைஞர் விருது..!
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இலக்கிய விழா
2024.12.11 ம் திகதி திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு H.E.M.W.G திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இவ்விழாவில் 2022,2023 மற்றும் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளுக்குமான கலைஞர்கள் தெரிவு இடம்பெற்றது.இதில் 2022ஆம் ஆண்டின் பல்துறைக்காக இளங்கலைஞர் விருது ஒலுவில் அஸீஸ் எம்.பாயிஸுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க அவர்களும் கலந்து கொண்டதோடு அமைச்சுக்களின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் எனப் பலரும் விழாவை அலங்கரித்தனர்
(இஸட்.ஏ.றஹ்மான்)