கணமூலை அஹதிய்யாவில் இடை நிலை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
புத்தளம் கணமூலை தாருல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையிலிருந்து 2023(2024)ஆண்டில் தேசிய இடைநிலை சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் மெளலவியா றிப்னாஸ் ஏ றாசிக் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஆசிரியர்களான ஸபானா நிஸார், ஸனூஸியா ஸாஹிர், மின்ஹா ஐயூப்ஹான்.,
பஜீலா முஸம்மில், ஸிப்னா பஸீத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததாக புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாறூக் பதீன் தெரிவித்தார்.








