இந்தியாவிற்கு ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்..!
ஜனாதிபதி அனுர குமார ஞாயிறன்று இந்தியா பயணம். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணமாகவுள்ளார். இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்ருவின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்ரு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட உயரதிகாரிகளுடன் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
