மத்திய மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த எச்.எம்.மதுபானி பியசேன மத்திய மாகாண கல்வி அமைச்சினதும் முதலமைச்சினதும் செயலாளராக இன்று (9) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய இவர் கண்டி ஹில்வுட் கல்லூரி மற்றும் கண்டி பெண்கள் உயர்தரக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ரஷீத் எம். றியாழ்)